தமிழகம் மற்றும் கேரளாவில் குண்டு வெடிப்பு எச்சரிக்கை
ஐ.எஸ், மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்களின் உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இந்த நிலைமையை தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‛‛இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹசீம், தமிழகம் மற்றும் கேரளாவில் சிலருடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களைச் சேர்ந்த 6 பேர் சில நாட்களுக்கு முன் இலங்கைக்கு பிரவேசித்து, பின்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கர் என்ற இடத்துக்கு சென்றுள்ளமை தெரிய வந்திருப்பதாக, இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.