சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மைக் பாம்பியோ கூறியதாவது, சுவிட்சர்லாந்து விழிப்போடு இருக்க வேண்டும். புதிய அதிவேக தொலைபேசி சேவைகளில் சீன உபகரண தயாரிப்பான ஹவாய்வை பயன்படுத்துவதே கவலைக்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்காவில் பாதுகாப்புக் காரணங்களை காட்டி ஹவாய் நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகையில், தகவல் சீன அரசாங்கத்திற்கு அனுப்பப்படும் என எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஹவாய் உபகரணங்களையே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.