Main Menu

சங்­க­டங்கள் தீர்க்கும் விநா­யக சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்

‘பிடித்து வைத்த பிள்­ளையார்’ என்று சொல்­வ­தற்­கேற்ப வடி­வ­மைக்­கவும், வணங்­கவும் எளி­மை­யாக இருப்­பவர் விநா­யகப் பெருமான். எளி­மையான மூர்த்தி என்­றாலும், பெரும்  கீர்த்­தியைக் கொண்ட முழு­மு­தற்­க­டவுள் இவர். இவரை விலக்­கி­விட்டு எந்த வழி­பாட்­டையும் மேற்­கொள்­ளவே முடி­யாது என்­ப­துதான் இவரின் சிறப்­பம்சம். ‘சங்­கஷ்டம்’ என்றால், கஷ்­டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்­க­டங்­க­ளையும் நீக்கும் சதுர்த்தி விரதம் நாளை கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.  அன்­றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநா­ய­க­ருக்கு வழி­பாடு செய்­யப்­ப­டு­கி­றது.

விநா­ய­கரைப் போலவே, விர­தங்­க­ளுக்குள் முதன்­மை­யா­னதும் எளி­மை­யா­னதும் சதுர்த்தி விர­தம்தான். முதன்­மு­தலில் சதுர்த்தி விரதம் கடைப்­பி­டித்த பிற­குதான், கிருத்­திகை, ஏகா­தசி, பௌர்­ணமி போன்ற மற்ற விர­தங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பதும் பொது­வான நியதி.

அடக்­க­மின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்­தி­ரனை, ஒளி­யில்­லாமல் போகும்­படி சபித்தார் விநா­யகர். கடும் தவத்­துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்­தி­ரனின் சாபத்தை நீக்­கினார் கண­நாதர். எனவே, சந்­திர பலம் பெற விரும்­புவோர் சதுர்த்தி விரதம் மேற்­கொள்ள வேண்டும். 

‘ஸ்ரீகி­ருஷ்ணர், பிரம்மா, புரு­சுண்டி முனிவர், செவ்வாய் ஆகியோர் இந்த சதுர்த்தி விர­தத்தை மேற்­கொண்டு வரம் பெற்­றார்கள்’ என்­கின்­றன ஞான நூல்கள்.

ஆவணி மாதம் வரும் ‘வளர்­பிறை சதுர்த்தி’ திதியை ‘விநா­யகர் சதுர்த்தி’ என்று அழைக்­கின்றோம். அன்­றைய தினம் நாம் விர­த­மி­ருந்து முறை­யாக விநா­ய­கரை வழி­பட்டு அரு­கி­லி­ருக்கும் ஆல­யங்­க­ளுக்குச் சென்று அறுகம்புல் மாலை­யிட்டு அவரைக் கொண்­டா­டினால், நமக்கு எல்லா வித­மான நன்­மை­களும் விளையும்.

எந்­த­வொரு காரி­யத்தை தொடங்­கி­னாலும், விநா­ய­கரை வழி­பட்டுத் தான் நாம் தொடங்­கு­வது வழக்கம். ‘பிள்­ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்­துக்­க­ளுக்கு நல்ல பலன் கிடைக்­கி­றது. என­வேதான் ‘மூல கண­பதி’ என்று அவரை நாம் வர்­ணிக்­கின்றோம்.

கணங்­க­ளுக்கு எல்லாம் அதி­ப­தி­யா­வதால் அவரை ‘கண­பதி’ என்று சொல்­கின்றோம். எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்­த­வ­ராக இருந்­தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்­த­வ­ராக இருந்­தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்­த­வ­ராக இருந்­தாலும், அனை­வரும் வணங்க வேண்­டிய தெய்­வ­மாக விளங்­கு­பவர் ஆனை­முகப் பெரு­மா­னாகும்.

அந்த ஆனை­மு­க­னுக்கு உகந்த மாதம் தான் ‘ஆவணி’ மாத­மாகும். அதேபோல்  விநா­யக சதுர்த்தி  விரதம்  நாளை  அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது . அன்­றைய தினம் பிள்­ளை­யாரை வழி­பட்டால் எல்லா பாக்­கி­யங்­களும் நமக்கு கிடைக்­கு­மென்று சாஸ்­தி­ரங்கள் சொல்­கின்­றன.

மஞ்சள் பொடி­யிலும் காட்சி தருவார். சாணத்­திலும் காட்சி கொடுப்பார். வீட்­டிலும் வழி­பாடு செய்­யலாம். விக்கி­ரகம் வைத்­தி­ருக்கும் ஆல­யத்­திற்கும் சென்று வழி­பாடு செய்­யலாம். தும்­பிக்கை வைத்­தி­ருக்கும் அந்த தெய்­வத்தை முழு நம்­பிக்­கை­யோடு நாம் வழி­பட்டால், இன்­பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.

விநா­யகர் விரதம்

1. விநா­யக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநா­யகர் சிலை மண்­ணினால் செய்­யப்­பட்­ட­தாக இருக்க வேண்டும். மஞ்­ச­ளையும் பிள்­ளை­யா­ராக பிடிக்­கலாம். நம் கட்டை விரல் அளவைப் போல பன்­னி­ரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

2. புரட்­டாசி மாத வளர்­பிறை சதுர்த்தி வரை நம் இல்­லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்­தோறும் பூஜை­களை முறை­யாகச் செய்து வரு­வ­துடன் நைவேத்­தி­யங்­களும் செய்ய வேண்டும். புரட்­டாசி சதுர்த்­திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதி­யிலோ, குளத்­திலோ, கட­லிலோ அல்­லது ஏதா­வது நீர்­நி­லை­க­ளிலோ சேர்த்து விட வேண்டும். ஆனால், இப்­போ­தெல்லாம் 3 நாட்கள், 

7 நாட்­க­ளி­லேயே கரைத்து விடு­கி­றார்கள்.

3. பார்­வதி தேவியே கடைப்­பி­டித்து வழி­காட்­டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையை செய்து தான் பார்­வதி தேவி ஈஸ்வ­ரனைக் கண­வ­ராக அடைந்தார்.

4. ராஜா கர்த்­தமன், நளன், சந்­தி­ராங்­கதன், முருகன், மன்­மதன் (உரு­வம் ­பெற்றான்), ஆதி­சேஷன், தட்சன் மற்றும் பலர் விநா­யக சதுர்த்தி விர­தத்தைக் கடைப்­பிடித்து உயர்ந்த நிலையை அடைந்­தனர்.

5. விநா­யக பக்­தர்­களில் தலை­சி­றந்­தவர் புரு­சுண்டி முனிவர். விநா­ய­கரை நோக்கித் தவ­மி­ருந்து விநா­ய­கரை நேரே தரி­சனம் செய்­தவர்.

6. தேவேந்­தி­ர­னு­டைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

7. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

8. சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

பகிரவும்...