கிளிநொச்சியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
போரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்குலண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் நிதி ஒழுங்கமைப்பில், கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக்கழகசெயலாளர் ஐயாத்துரை குகன் தலைமையில் 03.01.2016 அன்று, கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கலைஞர் வள்ளிபுரம், வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் (ரமேஸ்), போதகர் அசோக் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.