Main Menu

பிரான்ஸ்: ஒக்டோபரில் ஒரு நாள் முன்பாக Caf தொகை

பிரான்சில் மாதாந்தம் 5 ஆம் திகதி வழங்கப்படும்  குடும்பநல உதவிகள் (Caisse des Allocations familiales) வரும் ஒக்டோபர் மாதத்தில் ஒருநாள் முன்னதாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த தொகை 5 ஆம் திகதி  தானியங்கி முறையில் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும். அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் பட்சத்தில் மறுநாள் திங்கட்கிழமை வைப்புச் செய்யப்படும். இம்முறை ஒக்டோபர் 5 ஆம் திகதி சனிக்கிழமை வருவதால், வார இறுதிநாட்களில் பணப்பரிவர்த்தனை இடம்பெறாமல், இருநாட்கள் தாமதமாக திங்கட்கிழமையே இந்த தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.ஆனால் 48 மணிநேரம் தாமதாக வழங்கும் முடிவை மறுபரிசீலினை செய்து , இம்மாத ஒக்டோபரில் ஒரு நாள் முன்பாக 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பணம் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.