உலகின் ஆக விலை உயர்ந்த ஓவியம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் சொகுசுப் படகில்!
உலகின் ஆக விலை உயர்ந்த ஓவியம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் சொகுசுப் படகில் இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
லியோனார்டோ டா வின்ச்சி (Leonardo da Vinci) தீட்டிய அந்த சல்வட்டோர் முண்டி (Salvator Mundi) ஓவியம் 2017ஆம் ஆண்டு 450 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த ஓவியத்தின் இருப்பிடம் பற்றிய தகவல் ஏதும் இல்லை.
அந்த மர்மத்தைத் தீர்க்கும் வகையில், லண்டனில் தளம்கொண்டுள்ள ஓவிய விற்பனையாளர் ஒருவர் அந்த ஓவியத்தின் இருப்பிடம் பற்றி தகவல வெளியிட்டுள்ளார்.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சொகுசுப் படகில் அது வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சல்வட்டோர் முண்டி (Salvator Mundi) ஓவியம் லியோனார்டோ டா வின்ச்சி (da Vinci) கைவண்ணத்தில் உருவான மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
இருளில் இருந்து யேசுநாதர் தோன்றவதைப் போல் அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஓவியம் தொடர்பான சர்ச்சையும் நிலவிவருகிறது.
அதனை லியோனார்டோ டா வின்ச்சி (Leonardo da Vinci) வரையவில்லை என்றும், அவரது ஓவியப் பட்டறையில் இருந்த மற்றவர்கள் வரைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், ஓவியத்தின் இருப்பிடம் பற்றி அறிந்துகொண்டதில், ஓவியக் கலைத் துறையினருக்குப் பெரும் நிம்மதி என்றே சொல்லலாம்.