உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்
தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர். ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை கொண்டு 4 பேர் அமரக்கூடிய சிறிய விமானத்தை மூன்றே வாரங்களில் கட்டமைத்து அசத்தி உள்ளனர்.
மாணவர்கள் தயாரித்த இந்த விமானம் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான தன் முதல் பயணத்தை அண்மையில் தொடங்கியது. சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பயணத்தை நிறைவு செய்ய ஆறு வாரங்கள் ஆகும்.
இந்த விமானத்தை 17 வயதான மேகன் வெர்னர் என்கிற பெண் இயக்குகிறார். கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், பயணத்தில் முதல் நிறுத்தமாக சுமார் 1,300 கி.மீ. கடந்து நமீபியா நாட்டின் தலைநகர் வின்ஹோயக்கில் நேற்று தரையிறங்கியது.