இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் – மோடி

இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை காணொலியில் அறிமுகம் செய்து வைத்து கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்இ பகவத் கீதை நம்மை சிந்திக்க தூண்டுவதாகவும், நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் கொரானாவுக்கு உலகே மருந்து தேடிய போது இந்தியா தன்னால் இயன்றதை செய்தது எனத் தெரிவித்த அவர் இந்தியாவின் தடுப்பூசி உலகம் முழுதும் சென்றடைந்ததாகவும் கூறினார்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் மையக்கருத்து என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே வளங்களையும் உருவாக்குவது ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பகிரவும்...