Main Menu

இந்தியாவை வழிநடத்துவது என் கனவு, தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல் வெளியிட்டார். இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும், கைத்தறி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறினார். நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சேகரிப்பு மையங்கள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் கொண்ட பிரமாண்ட உணவுப்பூங்கா உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.