Main Menu

கனடாவில் பரவிவரும் வைரஸ்

கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக 63 பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறும்போது, குளிர்காலம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை காணப்படுவதாகவும் கனேடிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பகிரவும்...