ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் மீனா மங்கள் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு பாராளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளதுடன் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதுடன் அவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது