Day: May 11, 2019
பிரிட்டிஷ் பிரதமர் மே, சில நாள்களில் தனது பதவி விலகல் தேதியை அறிவிக்கக்கூடும்
பிரிட்டனின் பிரதமர் தெரேசா மே, அடுத்த சில நாள்களில் தமது பதவி விலகலுக்கான தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) அதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பானமேலும் படிக்க...
Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பிரான்ஸில் அண்மைத் தீச் சம்பவத்தில் சேதமடைந்த Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைப்பது தொடர்பான சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவது அதன் நோக்கம். பாரிஸிலுள்ள அந்தத் தேவாலயம் சென்ற மாதம் மூண்ட தீயில் பலத்த சேதமுற்றது. கட்டிமேலும் படிக்க...
போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கும்பல் கைது!
போலியான ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விற்ற விவகாரத்தில், திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின், சில இடங்களில், போலிமேலும் படிக்க...
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியப் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரியமேலும் படிக்க...
நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு!
பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்துமேலும் படிக்க...
வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு
வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வெனிசூலா அரசை வலியுறுத்தி உள்ளார். இந்தமேலும் படிக்க...
சிறுநீரகத்தில் கல் உருவானால், மீண்டும் உருவாகுவதற்கான சாத்தியம்!
சிறுநீரகத்தில் கல் உருவாகுவது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான பிரச்னைதான். இதில் பலரும் அறியாதவகையில் இந்தியாவில் 12 சதவீத மக்கள் சிறுநீர்ப்பாதைக் கல் உருவாவதிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் மீனா மங்கள் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு பாராளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளதுடன் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில்மேலும் படிக்க...
தமிழர்களின் காணிகளில் சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடடமேலும் படிக்க...
ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்மேலும் படிக்க...
”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்
ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதுகின்றன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே இரண்டாவதுமேலும் படிக்க...
கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த் தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால்மேலும் படிக்க...
18 எம்எல்ஏக்ளின் பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்! – எடப்பாடி
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் படிக்க...
ஏனோதானோ இடைத்தேர்தல் பணிகள்…! எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஏனோதானோவென்று பணியாற்றுவதாக வந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆக்கியுள்ளது. நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குமேலும் படிக்க...
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பலஸ்தீன பிரஜை நாடுகடத்தல்
சரியான காரணமின்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பலஸ்தீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார். 26 வயதுடைய பலஸ்தீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் உயர் கல்வி கற்றுமேலும் படிக்க...
அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி
பயங்கரவாதத்துக்கு அஞ்சி தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு துறையினர் சிறப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் பயங்கரவாதத்தை இல்லாதொழித்துமேலும் படிக்க...
புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்
தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில்மேலும் படிக்க...
வவுணதீவு பொலிஸார் படுகொலை: கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை!
மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டமை குறித்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று (சனிக்கிழமை) காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்மேலும் படிக்க...
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்திற்கும் வரி உயர்வு – அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களில் கிட்டத்தட்ட அனைத்திற்கும் வரியை உயர்த்த உத்தரவிட்டுள்ளார். 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீன இறக்குமதிகளுக்கு வரி உயர்த்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் அவ்வாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவும், சீனாவும் வாஷிங்டனில் 2மேலும் படிக்க...