அமைதியாக கடந்த போராட்டம்! – நாடு முழுவதும் 103 பேர் கைது!
நேற்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 33,700 பேர் கலந்துகொன்சிருந்தனர். பரிசுக்குள் எதிர்பார்த்திருந்த மாதிரி அமைதியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பரிசுக்குள் 4,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் பதிவாகவில்லை. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். தேடப்பட்டுவந்த நபர்கள் என சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். நாள் முடிவில் பரிசுக்குள் 37 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பரிசுக்குள் காவல்துறையினர் 14,485 இடங்களில் தடுப்புகள் மேற்கொண்டனர். இதனால் பாரியளவு வன்முறைகளும், சேதங்களும் தவிர்க்கப்பட்டது. நேற்றைய நாள் முடிவில், நாடு முழுவதும் 103 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 56 பேர் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.