Main Menu

Pôle emploi உதவித்தொகை ஒரு மாதம் நீடிப்பு

வேலை தேடும் உதவித்தொகை பெறுபவர்களுக்கு (chômeurs) கூடுதலாக ஒருமாதம் உதவித்தொகை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாதம் உதவித்தொகை முடியும் கட்டத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது .
நேற்றைய தினம் 25ம் திகதி புதன்கிழமை அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சின் மூன்று விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன. அவற்றில் வேலையற்றோருக்கான இழப்பீட்டை நீட்டிப்பது பற்றியும் ஆராயப்பட்ட து. இதைப் பயன்படுத்திக் கொள்ள, அவர்கள் தங்கள் கோப்பை ( Actualisation – Pôle Emploi) புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த நீட்டிப்பின் சரியான கால அளவு பற்றி அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அநேகமாக இக்கால அளவு மேலும் நீடிக்கப்படலாம் எனவும் அறியப்படுகிறது

பகிரவும்...