இலங்கை
பொது மக்கள் சேவை தொடரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், கொரோனா தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாகமேலும் படிக்க...
பிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு- சாணக்கியன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சாணக்கியன்மேலும் படிக்க...
நாட்டின் நலன்களைப் பொருட் படுத்தாமல் உலக வல்லரசுகளுடன் அரசாங்கம் நெருக்கமாக செயற் படுகின்றது – ஜே.வி.பி.
நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கொழும்பில் போராட்டம் நடத்தியதாகவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கொரோனா தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து – கோப்பாய் மக்கள் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அப்பகுதி மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அத்தோடு, கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள்மேலும் படிக்க...
சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்றின் அண்மைய அதிகரிப்பு தொற்று உறுதியான நோயாளிக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை கொத்தணி 6 அல்லது 8 வாரங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சுகாதார சேவைகளின் பதில் சுகாதாரமேலும் படிக்க...
இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்
இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்திலும் குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும்மேலும் படிக்க...
பிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்ற வீரம்,மேலும் படிக்க...
மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமேலும் படிக்க...
கிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த திருமண நிகழ்வுக்குச் சென்று, அன்றிரவு முழுவதும் வீடு திரும்பாததால் மாணவனைமேலும் படிக்க...
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் (வயது-69) இன்று மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்மேலும் படிக்க...
இருபதை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி
20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடந்த கட்சிக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் அரசாங்கத்தின் உயர்மேலும் படிக்க...
சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றிற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாட்!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்துவரப்பட்டார். சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம்!
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸா விதான ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – முன்னாள் சபாநாயகர்
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (வியாழக்கிழமை) என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் நாடாளுமன்றமேலும் படிக்க...
இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – கெஹெலிய!
இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணியாது – உதய கம்மன்பில!
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
பொது சுகாதார அவசர சட்டத்திற்கான தனி நபர் சட்ட வரைபினை தாக்கல் செய்தார் சுமந்திரன்
பொது சுகாதார அவசர சட்டம் இயற்றுவதற்காக தனிநபர் சட்ட வரைவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட வரைபில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொது சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.மேலும் படிக்க...
என்மீது எவரும் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம் – யோஷித ராஜபக்ச
எனது சேவையை பார்த்து, அதன்பின்னர் என்மீது எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாமென பிரதமரின் பணியாளர் சபை பிரதானியான யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- …
- 435
- மேலும் படிக்க
