Main Menu

இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்

இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்திலும் குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும் வெலிகடை பொலிஸ் பிரிவுகளிலும் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது.

மாவட்டத்திலுள்ள மக்கள், தமக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...