Main Menu

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம்!

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸா விதான ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் இரட்டை குடியுரிமை பிரிவை நீக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளமையினைத் தொடர்ந்தே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இரட்டை குடியுரிமை பிரிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு குறித்த அனைவரும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...