Main Menu

சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்றின் அண்மைய அதிகரிப்பு தொற்று உறுதியான நோயாளிக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணி 6 அல்லது 8 வாரங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சுகாதார சேவைகளின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும் ஒரு வயதான நோயாளி அல்லது ஒரு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாக்கினால் அவரின் நிலைமை தீவிரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த கொத்தணியில் இருந்து வைரஸ் பரவுவது எந்த நேரத்திலும் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரித்தார்.

அத்தோடு நாட்டில் ஒரு கடுமையான நிலைமை உருவாகியுள்ளது என்றும் எனவே சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

பகிரவும்...