இலங்கை
செல்வம் அடைக்கலநாதன் பிரதமருடன் சந்திப்பு
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று சந்தித்துள்ளார். பிரதமரின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள்மேலும் படிக்க...
படகில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – இலங்கை அரசு
மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகில் இருந்தோருக்கு அவசியமான உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் அவசியமான ஏனைய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இவ்விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வெகுவிரைவில்மேலும் படிக்க...
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டும் – அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் இணைந்து கொண்டார் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தமேலும் படிக்க...
திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் அகதிகள் படகு

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இப்படகு 102 பேருடன் நேற்று (19) கரை ஒதுங்கியது. குறித்த இப்படகு திசைமாறி வந்து கரையொதுங்கியதாகவும்,மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் : ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிமேலும் படிக்க...
2025இல் சுற்றுலாப் பணிகள் பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியல் வெளியீடு – இலங்கை மூன்றாம் இடத்தில்

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது. வெப்பநிலை, இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றைமேலும் படிக்க...
தற்போதைய ஜனாதிபதியாவது புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனை நிறைவேற்றுவார் என எதிர் பார்க்கின்றோம் – முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாடு பாரியளவில் முன்னேற்றமடைந்திருக்கும். தற்போதைய ஜனாதிபதியாவது அதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்காகக் கொண்டுமேலும் படிக்க...
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச் சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு சிங்கள மக்களுக்கு ஒன்றையும், இந்தியாவுக்கு பிறிதொன்றையும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தேசபற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
யாழில் எலிக் காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு – தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்;. தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும், யாழ்ப்பாணமேலும் படிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்
இலங்கை தமிழரசுக் கட்சியின்; யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் தீர்மானங்களுக்குத் தடை உத்தரவொன்றைப் பிறக்குமாறு கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான வைத்தியர் சி.சிவமோகனினால் குறித்த வழக்கு தாக்கல்மேலும் படிக்க...
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – ஹிஸ்புல்லாஹ் அரசிற்கு கோரிக்கை
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். பொருட்களின் விலைகளைக் குறைப்போம். மின்சார கட்டணங்கள்மேலும் படிக்க...
103 வெளிநாட்டுப் பயணிகளுடன் முள்ளி வாய்க்காலில் கரை ஒதுங்கிய கப்பல்

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மியன்மாரிலிருந்து 103 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கானமேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை
இஸ்லாத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (19) நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரர்மேலும் படிக்க...
அமைச்சரவை அமைச்சர்களின் கல்வித் தகைமையை பகிரங்கப் படுத்துங்கள் – எதிர்க்கட்சி ஆளும் தரப்புக்கு சவால்
எதிர்க்கட்சியின் உறுப்பினர் அஜித் பி. பெரேரா உயர் சட்டத்தரணி என்ற பதத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது இலங்கை நீதி கட்டமைப்பில் அவ்வாறானதொரு பதவி கிடையாது என நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார குறிப்பிட்ட கருத்துக்கு அஜித் பி.பெரேரா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இல்லாத கலாநிதிமேலும் படிக்க...
கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சபாநாயகர் பதவி விலகியது போன்று ‘பார் பேர்மிட்’ வழங்க சிபார்சு செய்தோரும் விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்
சபாநாயகர் பதவி விலகியது போன்று ‘பார் போமிட்’ வழங்க சிபார்சு செய்தவர்களும் பதவி விலக வேண்டுமென தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்மேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு பாடசாலைகளை புனரமைக்க அரசு நிதி விடுவிக்க வேண்டும் – ஹிஸ்புல்லா
வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை விடுவிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் விரைவாக புனரமைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில்மேலும் படிக்க...
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- …
- 442
- மேலும் படிக்க


