Author: trttamilolli
“கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” – ட்ரம்ப் மீதான தாக்குதல் குறித்து பைடன் கருத்து
“எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில்மேலும் படிக்க...
நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்
நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலியை, நாட்டின் பிரதமராக அதிபர் ராம் சந்திர பாடேல் நியமனம் செய்தார். நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர்மேலும் படிக்க...
கடைசி நொடியில் தலையை திருப்பியதால் உயிர் பிழைத்த ட்ரம்ப்
துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடைசி நொடியில் தலையை திருப்பும் ஸ்லோ மோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதுமேலும் படிக்க...
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு
“தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது.” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்மேலும் படிக்க...
ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டுமேலும் படிக்க...
மாணவர்களின் எதிர்காலம் கருதி செயற்படும் ஜனாதிபதிக்கு எப்போதும் நன்றி உள்ளவர்களாக செயற்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, நாட்டிலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு (14/07/2024) நேற்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட 662 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில்மேலும் படிக்க...
சுயநல அரசியல்வாதிகள் சிலர் மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் – கடற்றொழில் அமைச்சர்
சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும்மேலும் படிக்க...
மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்குவது தான் உண்மையான புரட்சியாகும்
“மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது. மாறாக நாட்டில் மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே உண்மையான புரட்சி” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த நாட்டு மக்களால் அந்தப் பின்னணியைமேலும் படிக்க...
தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைத்த லைபீரிய ஜனாதிபதி
லைபீரிய ஜனாதிபதி Joseph Boakai தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளார். பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான ஒரு முன்மாதிரி செயற்பாடாக இந்த தீர்மானம் இருக்கும் என அவர் நம்புவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில்மேலும் படிக்க...
சரியான பொருளாதார முறைமை இல்லாவிட்டால் கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் – ஜனாதிபதி
சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி – கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும்மேலும் படிக்க...
பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்: பின்னணியில் இஸ்ரேல் என ஐ.நா வல்லுநர்கள் கருத்து
காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்மேலும் படிக்க...
“குடியரசு என்பதன் பொருள் இப்போதுதான் புரிகிறது”- ராமதாஸ் விமர்சனம்
இந்தியக் குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத் தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம்மேலும் படிக்க...
உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடுங்கள்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும் என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம்மேலும் படிக்க...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு இன்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இம்மாதம் முதல் பெருந்தோட்டமேலும் படிக்க...
நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது
தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமெனமேலும் படிக்க...
பிரச்சினைகளின் போது ஓடி ஒளிந்த தலைவர்கள் இன்று மேடைகளில் வீரவசனம் பேசுமளவுக்கு நாட்டின் நிலைமை மாறியுள்ளது
நாட்டில் நெருக்கடி ஏற்பட்ட போது ஓடி ஒளிந்தவர்கள் இன்று தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசுமளவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளதாக வர்த்தக, சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக சவாலை ஏற்றுமேலும் படிக்க...
“கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்” – அன்புமணி
விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்து முதியவர் மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்தமேலும் படிக்க...
“மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்” – உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளராக கடந்த 2019, ஜூலை 4ம் தேதி நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
காலஞ்சென்ற இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி
காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று(04) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 838
- மேலும் படிக்க