உலகிலேயே முதல் முறையாக LEGO பிளாக் முழு கார்
உலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது.
10 லட்சத்துக்கும் அதிகமான லெகோ பிளாக்குகளை கொண்டு, எந்த வித பசைகளும் இன்றி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பயணிக்கும் வகையில், ஆயிரத்து 500 கிலோ கிராம் எடையில் தாயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்.
உலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க லெகோ பிளாக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த காரானது, டென்மார்க்கின் பைலண்டிலுள்ள (Billund) லெகோ பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு, அங்கேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 10ம் தேதி வரை அங்கேயே பார்வைக்கு வைக்கப்படும் லெகோ கார், அதன் பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது.