டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்
டில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை ரோகினி பகுதியில் நேற்று, கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி அடுக்குக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர்.
ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 முதல் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்திற்கு மோசமான வானிலைதான் காரணமா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இடிபாடுகளுக்கு இடையிலிருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் , டில்லி தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
