Main Menu

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

இந்தோனேசியா,ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் பயணமாக புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் திகதி வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த சில நாட்களில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் இருநாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதும், வருங்காலத்தில் நமது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த பயணத்தின் நோக்கமாகும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.