Main Menu

தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு

கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆளுநர் தனக்கு இருக்​கும் அதி​காரத்​தின் அடிப்​படை​யில், இந்த மனு மீது உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அவர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர்.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வென்​றது. காங்​கிரஸ் – 5, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் (ஐயூஎம்​எல்) – தலா 2 மற்​றும் அதி​முக​வில் இருந்து 25 எம்​எல்​ஏக்​களின் ஆதர​வுடன் நம்​பிக்கை வாக்​கெடுப்​பிலும் அரசு வெற்றி பெற்​றது.

காங்​கிரஸ், விசிக, ஐயூஎம்​எல் அமைச்​சர​வை​யில் பங்​கேற்று, கூட்​ட​ணி​யிலும் இணைந்​துள்​ளன. அமைச்​சரவை மற்​றும் கூட்​ட​ணி​யில் இடம்​பெற மறுத்​து​விட்ட கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வெளி​யில் இருந்து ஆதரவு தரு​வ​தாக கூறிவரு​கின்​றன. இந்த நிலை​யில், தவெக பலத்தை அதி​கரிக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் முதல்​வர் விஜய் இருக்​கிறார்.இந்த சூழலில், அதி​முக​வில் இருந்து இது​வரை 6 எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து ​விட்டு தவெக​வில் இணைந்​துள்​ளனர். இதனால் தவெக குதிரை பேரத்​தில் ஈடு​படு​வ​தாக அதி​முக குற்​றம்​சாட்டி வரு​கிறது.