Main Menu

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “தனது தங்கை” எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 35ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சிற்றூந்து உற்பத்தி ஆலை ஒன்று ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ளது,இதனை இந்தியாவுக்கு சென்றுள்ள ஜப்பானிய பிரதமருடன் இந்திய பிரதமர் திறந்து வைத்தார்.
இதேவேளை இந்திய – ஜப்பான் 16 ஆவது வருடாந்த உச்சிமாநாடு புதுடில்லியில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில், பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் வர்த்தக மன்றக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட ஜப்பானிய தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்த நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் விநியோகச் சங்கிலிகள், குறை கடத்திகளாகிய கனிமங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ₹1.19 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ளன.