Day: July 3, 2026
அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்தியமேலும் படிக்க...
தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (03 July) இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 2027 ஜனாதிபதி தேர்தலின் அதிகாரபூர்வ திகதிகள் வெளியீடு

2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 18-ஆம் திகதியும், இரண்டாம் சுற்று மே 2-ஆம் திகதியும் நடைபெறும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் காலக்கெடுவை கருத்தில் கொண்டு இந்த திகதிகள் தேர்வுமேலும் படிக்க...
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு

பிரான்ஸில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனமேலும் படிக்க...
பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் பழுதடைந்தமேலும் படிக்க...
ஆனந்த சங்கரி மற்றும் அமைச்சர் விஜிதவிற்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த சங்கரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தனது நீண்டகால அரசியல் அனுபவங்களை தம்முடன் பகிர்ந்துமேலும் படிக்க...
நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி கூடவுள்ளது

நாடாளுமன்றஅமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள்மேலும் படிக்க...
குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தனது தேசியப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தங்கள் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்து அறிய உதவும் வகையிலான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஜனாதிபதி செயலகத்தில்,மேலும் படிக்க...
வசந்த கரன்னா கொடவுக்கு பிணை – நீதிமன்றம் உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே,மேலும் படிக்க...
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் தவெகவில் இணைந்தனர்

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் என 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எஸ்எம். ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் தவெகவில்மேலும் படிக்க...
பல ஆண்டுகளின் பின் தனது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு அழைத்து வரும் இளவரசர் ஹரி

தான் பிறந்து வளர்ந்த நாட்டைத் தனது குழந்தைகளுக்குக் காண்பிக்கும் நோக்குடன் இளவரசர் ஹரி அடுத்த வாரம் பிரிட்டனுக்குத் திரும்பவுள்ளார். அதன்படி, மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளுடன் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தை வந்தடைவார்கள்மேலும் படிக்க...
பிரான்ஸுக்கான புதிய இலங்கைத் தூதுவராக சுகீஸ்வர குணரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரான்ஸ் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராகவும், யுனெஸ்கோவுக்கான (UNESCO) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ள சுகீஸ்வர குணரத்ன, நேற்று (02) பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். தூதரக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கை மற்றும்மேலும் படிக்க...
பாராளுமன்ற முன்னாள் பிரதம உரைபெயர்ப்பாளர் எம்.கே.ராகுலன் காலமானார்

ஓய்வு பெற்ற பாராளுமன்ற பிரதம சமகால உரைபெயர்ப்பாளரும் ஓய்வு பெற்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே.ராகுலன் தனது 81ஆவது வயதில் புதன்கிழமை (01) காலமானார். நீண்டகாலம் பாராளுமன்ற மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு அவர் ஆற்றிய சேவைக்காக கடந்த ஆண்டு வாழ்நாள் சேவை விருதுமேலும் படிக்க...
ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “தனது தங்கை” எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 35ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சிற்றூந்து உற்பத்தி ஆலை ஒன்று ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ளது,இதனை இந்தியாவுக்கு சென்றுள்ள ஜப்பானியமேலும் படிக்க...
ரகித, சரித் உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்று (3) மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்றதாக கூறப்படும்மேலும் படிக்க...
உலகின் சிறந்த சுற்றுலா தீவு நாடாக இலங்கை முதலிடம்

2026 ஆம் ஆண்டில் உலகளாவிய சுற்றுலா குறித்த கண்ணோட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது; அதன்படி, உலகின் மிகவும் புகழ்பெற்ற தீவுச் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இயற்கை அழகு, கலாச்சாரச் செழுமை, பல்லுயிர் வளம், பயணிகளின் அனுபவம்மேலும் படிக்க...
யோஷித ராஜபக்ஷவின் பின்னடைவு – சீராய்வு மனு தள்ளுபடி

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரானமேலும் படிக்க...
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானியமேலும் படிக்க...
