Main Menu

யாத்திரை பேருந்தில் திடீர் தீ: உடமைகள் சேதம் – பயணிகள் உயிர் தப்பினர்

கம்பளை பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றில் இன்று ( 16) நண்பகல் திரப்பனை, கல்குளம் பிரதேசத்தில் பகுதியில் வைத்து திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் சாரதி, நடத்துநர் உட்பட சுமார் 12 பேர் இருந்ததாகவும், அவர்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவல் ஏற்பட்டவுடன், சாரதியும் நடத்துநரும் உடனடியாகப் பேருந்தை நிறுத்தி, அதில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

தீயினால் பேருந்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளின் சில பொதிகள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியானதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

பயணிகளின் கூச்சலைக் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்களும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.

பகிரவும்...