Main Menu

டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடி வைப்பதற்கு ஜேர்மன் திட்டம் !

கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது.

அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முன்னர் நாடளாவிய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காத ஜேர்மனியின் மாநிலங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

அதன்படி பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...