Main Menu

40 ஆண்டுகால அரசியல் அமைப்பை நாடு மாற்ற வேண்டுமா? சிலியில் நாளை வாக்கெடுப்பு!

சிலியில் அகஸ்டோ பினோசேவின் சர்வாதிகார காலத்தில் எழுதப்பட்ட 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் அண்மைக்காலமாக அங்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சாண்டியாகோ நகரில் நேற்றும் கூடிய மக்கள், அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.

கடந்த வார இறுதியில் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த போராட்டங்களின் போது தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்து கட்டண உயர்வு தொடர்பாக குறைந்தது 26பேர் கடுமையான மோதல்களில் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பகிரவும்...