34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)

தாயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் Dr.ரவி ரஞ்சி தம்பதிகள் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தங்களது 34வது ஆண்டு திருமணநாளை தனது இல்லத்தில் பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவனுடன் இணைந்து கொண்டாடுகின்றார்கள்.

இன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவி ரஞ்சி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவன், ரவி அவர்களின் அம்மா, தம்பி, மச்சாள், பெறாமக்கள், ரஞ்சி அவர்களின் அண்ணாமார், அண்ணிமார், தம்பி,மச்சாள், மருமக்கள்

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் அருளோடு 16 செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவி ரஞ்சி தம்பதிகளை எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் ரஜீவன் சஞ்சீவன் அவர்கள் இருவருக்கும் எமது நன்றிகள்.

 

Résultat de recherche d'images pour "wedding anniversary gif"


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !