Sunday, June 10th, 2018

 

வடகொரிய அதிபர் சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு

சிங்கப்பூர் பிரதமர் லீயை இன்று சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ட்ரம்ப் உடனான பேச்சுவர்த்தைக்கு ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர்  கிம் ஜாங் அன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ள நிலையில், கிம் ஜாங் அன், சிஙகப்பூர் பிரதமர் லீ லூங்கை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்குடன் பேசிய கிம் ஜாங் அன்,  ‘‘அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. இந்த சந்திப்பிற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றிகள்” என தெரிவித்தார்.


ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்

அதிரடி நாயகன் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் தனது 90-வது வயதில் லண்டனில் காலமானார். பிரபல ஆங்கில நாவலாசிரியர் இயான் பிளமிங்ஸ் எழுதிய துப்பறியும் நாவல் கதைகளை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஹாலிவுட் படத் தயாரிப்பாளரான ஆல்பர்ட் ஆர் பிரக்கோலி இறங்கினார். ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்னும் சகலாகலா வல்ல சாகச துப்பறிவாளரை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கதைகளில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் பிரிட்டன் நாட்டின் பின்னணியில் நடப்பதுபோல் அமைந்திருப்பதால் இந்த வரிசையின் பெரும்பாலான படங்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிரிட்டனிலும் பிறநாடுகளிலும் படமாக்கப்பட்டன. இந்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தில் கதாநாயகனாக சீன் கேனரி மற்றும் கதாநாயகியாக யூனிஸ் கேசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் 1962-ம்மேலும் படிக்க…


கிம் ஜாங் அன் – டிரம்ப் சந்திப்பால் அமைதி ஏற்பட போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைநாடுகளாக விளங்கி வரும் அமெரிக்கா – வடகொரியா நாடுகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையிலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர். இந்நிலையில், இந்த சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், ‘எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்கும், இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கி,மேலும் படிக்க…


அம்மா இடத்தில் தங்கை இருக்கிறாள் – ஜான்வி

எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான் என்று ஸ்ரீதேவியின் மகன் ஜான்வி கூறியிருக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஸ்ரீதேவி மறைவிற்கு பிறகு போனி கபூர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் மகள்கள் இருவருடனும் கலந்துகொள்கிறார். இதுபற்றி ஜான்வியிடம் கேட்கப்பட்டதற்கு ’’அதுதான் எங்களைப் பாதுகாப்பாக உணரவைக்கிறது. அப்பாவுக்கும் ஆறுதலாக இருக்கிறது. அம்மாவின் இழப்பு எங்கள் பாசப் பிணைப்பில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாவை இழந்துவிட்டோம். இந்த இழப்பை நாங்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை. எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான். வெளிப்படையாகச் சொல்வதென்றால் குஷிதான் என் மீது அதிகளவு பாசத்தை வெளிப்படுத்துவாள். எனக்கு அந்த அளவிற்கு தெரியாது. என்னை ஒரு குழந்தை போல் பாவித்து என் மீதுமேலும் படிக்க…


செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார்

7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினார். செம்மண் கோர்ட் ராஜாவான நடாலின் ஆட்டத்திற்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ருசித்தார்.


தூத்துக்குடி போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு – தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22ம் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மக்கள்மேலும் படிக்க…


ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியே அதிமுக – தேர்தல் கமிஷன் அறிவிப்பால் தினகரனுக்கு பின்னடைவு

அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி கூட்டப்பட்டு அதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டனர்.மேலும் படிக்க…


இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பை – கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா

இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்கத்தில் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 29-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து, இந்தியா 2-0 என்றமேலும் படிக்க…


சிறிசேன ரணில் சந்திப்பு – சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஏற்பாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக கடந்த வாரம் விமர்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார். ஜனாதிபதி சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணிநேர சந்திப்பின்போதே இருவரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது ஐக்கியதேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான நல்லுறவிற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் விடயங்கள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்ந்துள்ளனர். தேசிய அரசாங்கம் தொடரவேண்டும் என்பது குறித்து உறுதியான விருப்பத்தை கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நான்கு சிரேஸ்ட அமைச்சர்களே இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மகிந்த சமரசிங்க,சரத் அமுனுகம,மகிந்த அமரவீர மற்றும் துமிந்த திசநாயக்க ஆகிய நால்வருமே இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டது இது இரண்டாவது தடவையாகும்.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரானமேலும் படிக்க…


11 மணிநேர சுற்றி வளைப்பில் 3666 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட  11 மணிநேர  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 3666 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்த வகையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 3666 பேரில் 998 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் 648 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் எனவும் ஏனையோர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


சிங்கப்பூரில் கால் பதித்தார் கிம்

வரலாற்றில் மிக முக்கிய சந்திப்பாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந் நிலையில்  இன்று சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிம்யொங்கிற்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை தமிழரான சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அத்துடன் இன்று கனடாவின் கியூபெக் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் ட்ரம்ப், அங்கிருந்து நேரடியாக இன்று மாலை சிங்கப்பூர் செல்லவுள்ளார். ட்ரம்பும் கிம்யொங் உன்னும் எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரின் சென்டெசா தீவில் உள்ள கப்பெலா ஹோட்டலில் வைத்து  உத்தியோகவூர்வமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இச் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க உலகம் முழுவதிலும் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில் ஒழுங்கு முறைகளைமேலும் படிக்க…


மட்டக்களப்பு, காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டுக் கொலை – துப்பாக்கிதாரிகள் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (08.06.18) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் இன்று காலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற காவற்துறையினர் இவர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


“கிளிநொச்சி வரும் ஜனாதிபதி அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்”

கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள் எனவும், எனவே தங்களின் நிலைமையினை கருத்தில் எடுத்து ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம் எனத் தெரிவிக்கும் அச்சிறுவர்கள் அம்மாவை இழந்து அப்பாவை பிரிந்துமேலும் படிக்க…


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூர் வந்தடைந்தார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூர் வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்தற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் போலீசார் வாகனங்கள் அணிவகுக்க தான் தங்கும் ஹோட்டலுக்கு டிரம்ப் சென்றுமேலும் படிக்க…


மூத்த ஊடகவியலாளர் காலமானார்

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10-06-2018) காலை காலமானார். அவரது உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நீண்ட நாற்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர். அன்னாரது ‘ஜனாசா’ நல்லடக்கம் இன்று(10-06-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர் வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது – பன்வாரிலால்

கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சென்னையில் நடந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார். செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார். முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சிமேலும் படிக்க…


33 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு இன்னிங்சையும் டிக்ளேர் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ்

கடந்த 1985-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்சிங்சையும் டிக்ளேர் செய்த வெஸ்ட் இண்டீஸ் 33 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று அதேபோல செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்குமேலும் படிக்க…


ஆப்கன் பயங்கரவாதத்தின் விளைவுக்கு உதாரணம் – ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் பேச்சு

பயங்கரவாதத்தின் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான உதாரணம் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- பயங்கரவாதத்தின் விளைவு என்ன? என்பதற்கு ஆப்கானிஸ்தான் துரதிர்ஷ்டவசமான உதாரணம். அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான முடிவுக்கு பிராந்திய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும்.மேலும் படிக்க…


அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது

அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது எனவும் இதுகுறித்து அமெரிக்காதான் இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவேன் என டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார் எனவும் அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது எனவும் இதுகுறித்து அமெரிக்காதான் இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாநாடுகளின் போது தான் ட்ரம்பை சந்தித்துப் பேசியுள்ள போதிலும் அந்த சந்திப்புகள் இருநாட்டு உறவை மேம்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருதரப்புக்குமிடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமெனவும் புட்டின் தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த அமைப்பில் மீண்டும் ரஷ்யாவைமேலும் படிக்க…


ஹவுத்தி போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இரு சவூதி அரேபிய பிரஜைகள் பலி

ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவூதி அரேபியாவை சேர்ந்த 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனில் அரசாஙகத்துக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேவேளை ஏமன் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்ற சவூதிஅரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஹவுத்தி போராளிகளை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் இருந்து சவூதி அரேபியா நோக்கி ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலர் காயமடைந்துளடளதாகம் தெரிவிக்கப்படுகின்றது


இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் எனவும் அவர்களுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதாகவும் ஏனையோர் அங்கிருந்து தப்பி சென்றறுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


தலைமன்னார் மீனவர்கள் இருவர் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில்  தலைமன்னார் கடற்கரையில் இருந்து நண்டு வலை பயன்படுத்தி ஒரு பைபர் படகில்  மீன்பிடிக்க சென்ற கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கரை திரும்பாததால் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களின் உறவினர்கள்  மனு அளித்தனர். மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில்  தீவிர  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையிடையே இன்று  அதிகாலை அரிச்சல்முனை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களிடம் தலைமன்னார் மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை விசாரித்தாக தனுஷ்கோடி மீனவர்கள்  மெரைன் போலிஸாரிடம்  தகவல்  வழங்கியுள்ளனர்.


கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகா­ணத்தில் இடம்­பெற்று வரும் சிங்­களக் குடி­யேற்றம் தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரியவருகின்றது. குறிப்­பாக முல்­லை­தீவு மாவட்­டத்தில் மகா­வலி திட்­டத்தின் j வலயம், k வலயம், l வலயம் போன்­ற­வற்றின் கீழ் பாரிய சிங்­களக் குடி­யேற்றம் இடம்­பெற்று வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் இது தொடர்­பாக வடக்கு மாகாண சபை­யிலும் விவா­திக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் எதிர்­வரும் 19 ஆம் திகதி காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கூட்­ட­மொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இக் கூட்­டத்தின் போது முல்­லைத்­தீவு வவு­னியா போன்ற இடங்­களில் இடம்­பெற்று வரும் குடி­யேற்­றங்கள் தொடர்­பான தர­வு­களைக் கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது.


கூட்­ட­மைப்பை சிதைப்­பது குறித்து முதல்வர் சிந்­திக்க வேண்டும்

தமிழ் மக்­களின் ஒற்­று­மையை இது­வரை காலமும் பேணிப் பாது­காத்து அப் பலத்­தி­னூ­டாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சிதைத்து, அக் கட்­சி­யினை விட்டுப் பிரிந்து செல்­வது குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் சிந்­திக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் அவ்­வாறு அவர் செய்­வா­ராயின் அது தமிழ் மக்­களின் ஒற்­று­மை­யினை சிதைத்­தமை போன்­ற­தாகும் எனவும் தெரி­வித்­துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ளர்கள் யார்  என்­பதை இது­வரை தீர்­மா­னிக்­காத நிலையில் அதனைத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் நெருங்­கி­விட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள சுமந்­தி­ரனின் இல்­லத்தில், சம கால அர­சியல் நிலை­மைகள் குறித்து நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு பத்­தி­ரி­கை­யா­ளர்­களால் எழுப்­பப்­பட்ட வினாக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்ட விட­யங்­களைக் குறிப்­பிட்டார். அவ­ரிடம்,மேலும் படிக்க…


ஜஸ்டின் ட்ரூடோ – டிரம்ப் இடையே கருத்து மோதலுடன் முடிவடைந்த ஜி7 உச்சி மாநாடு

கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா மீது நேரடியாக குற்றம் சாட்ட, கூட்டறிக்கைக்கான தனது ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றுள்ளார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாமேலும் படிக்க…


34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)

தாயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் Dr.ரவி ரஞ்சி தம்பதிகள் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தங்களது 34வது ஆண்டு திருமணநாளை தனது இல்லத்தில் பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவனுடன் இணைந்து கொண்டாடுகின்றார்கள். இன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவி ரஞ்சி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவன், ரவி அவர்களின் அம்மா, தம்பி, மச்சாள், பெறாமக்கள், ரஞ்சி அவர்களின் அண்ணாமார், அண்ணிமார், தம்பி,மச்சாள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் அருளோடு 16 செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவி ரஞ்சி தம்பதிகளை எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் வாழ்த்துகின்றார்கள். இன்றையமேலும் படிக்க…


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப்

பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர். ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ். அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார். இதனால் மூன்றாவது சுற்றைமேலும் படிக்க…


ஹெலிகொப்டர் எடுத்து விழாக்கள் செய்யும் தமிழர்களுக்கு …

வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள். பணத்தை தண்ணி போல இறைத்து, திருமணங்களையும் , புப்புனித நீராட்டு விழாக்களையும், ஏன் பிறந்த நாட்களையும் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் ஒரு நிகழ்வுக்கு செலவு செய்யும் பணம், 100 குழந்தைகள் 1 வருடத்திற்கு நல்ல உணவு உண்ணக் கூடிய பணம். ஆனால் இவர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. இங்கே பாருங்கள், ஆடம்பரமாக ஹெலிகொப்டரில் வந்து இறங்கி தாலி கட்டவேண்டிய நபருக்கு என்ன நடந்தது என்று ? ஹெலி இறங்கும் வேளையில் நடுவே சென்ற மின்சார கம்பியில் சிக்கி விழுந்து நொருங்கிவிட்டது. இதுவே காரில் அவர் வந்திருந்தால் சிலவேளை இந்த விபத்தில் இருந்து தப்பித்திருக்க முடியும். தமிழர்கள் சிலர் தமது பிறந்த நாளைக்கு லம்பகினி காரில் வந்து இறங்குவது ! பாகுபலி ஸ்டைலில் அரன்மனை கட்டி, அங்கே சென்று பிறந்த நாளைமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !