Main Menu

3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு!

இந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பஜீரா எனப்  பெயர் சூட்டப்பட்டுள்ள குறித்த நகரம் 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நகரில் இந்து கோயில்கள், நாணயங்கள், தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கி.மு 326இல் அலெக்சாண்டர் தனது படையுடன் பாகிஸ்தானின் ஓடிகிராம் என்ற பகுதியை கைப்பற்றியதாகவும், இதன்பின்னர் பஜீரா என்ற நகரத்தையும், கோட்டை ஒன்றை கட்டியதாகவும் வரலாற்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பகிரவும்...