Main Menu

பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடி சேவை – €27 யூரோக்களில் இருந்து கட்டணங்கள்

முதன் முறையாக பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடியாக போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  SNCF நிறுவனம் இந்த சேவையை முதன்முறையாக இவ்வருட கோடை காலத்துக்கு என அறிமுகம் செய்துள்ளது.

பரிசில் மொம்பர்னாஸ் நிலையத்தில் இருந்து தொடருந்தில் புறப்படும் பயணிகளை Pontorson (Manche) நிலையத்தில் இறக்கி, அங்கிருந்து பேருந்தில் ஏற்றி Mont-Saint-Michel இற்கு அழைத்துச் செல்லும். பயணிகள் எவ்வித தயக்கமும் இன்றி நேரடியாக Mont-Saint-Michel இற்கு செல்வதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு SNCF தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த நேரடி சேவைகள் செப்டம்பர் மாதம் வரை இயங்கும். 3 மணிநேரமும் 46 நிமிடங்களும் இந்த மொத பயணத்துக்காக எடுத்துக்கொள்ளும். தொடருந்து + பேருந்து இரு சேவைகளையும் சேர்ந்து மொத்தமாக €27 யூரோக்களில் இருந்து கட்டணங்கள் ஆரம்பிக்கின்றது. மொத்த பயண தூரம் 361 கி.மீ ஆகும்.