Main Menu

2300 நிபுணர்கள் மத்தியில் கோத்­தா­பய கொள்கை விளக்கம்

துறைசார் நிபு­ணர்­களின் அங்­கத்­து­வத்­தினைக் கொண்­டி­ருக்கும் ‘சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான தொழில்சார் நிபு­ணர்கள்’ (வியத்­கம)அமைப்பின் வரு­டாந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு  ஷங்கிரில்லா ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இந்த மாநாட்டில் நாட­ளா­விய ரீதியில் இருந்து 2300 பேர் வரை­யி­லான துறைசார் நிபு­ணர்கள் பங்­கேற்­க­வுள்­ளனர். மேலும் இம்­மா­நாட்டில் பங்­கேற்­ப­தற்கு கட்­சித்­த­லை­வர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இந்­நி­லையில் இம்­மா­நாட்டில் விசேட உரை­யாற்­ற­வுள்ள பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்ஷ,  தனது ஆட்­சியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள அர­ச­கொள்­கைகள் பற்றி விரி­வாக தெளிவு படுத்­த­வுள்­ள­தோடு, அதன் செயற்­பாட்டு திட்­டங்கள் தொடர்­பிலும் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.  அத்­துடன் பல்­து­றைசார் நிபு­ணர்­களின் கேள்­வி­க­ளுக்கும் தனது உரையின் பின்னர் அவர் பதி­ல­ளிக்க உள்ளார். 

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே ‘பலம்­பெறும் செயற்­றிட்டம்’ என்ற தொனிப்­பொ­ருளில் நாட்டின் அர­ச­கொள்­கைகள் தொடர்­பி­லான வரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் சம­கால சூழ­லுக்கு அமை­வாக அவற்றில் மேற்­கொள்ள வேண்­டிய மாற்­றங்­களை மையப்­ப­டுத்­தியே இம்­மா­நாட்டில் கருத்­துப்­ப­கிர்வு நடை­பெ­ற­வுள்­ளது. 

மேலும் இம்­மா­நாட்டில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவும் பங்­கேற்­க­வுள்­ள­தோடு உரை­யொன்றை நிகழ்த்­த­வுள்ளார்.  

ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் 2016ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாடு­தி­ரும்­பி­யி­ருந்த முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ

‘சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான தொழில்சார் நிபு­ணர்கள்’ (வியத்­கம) என்­ற­பெ­யரில் அமைப்­பினை ஸ்;தாபித்திருந்ததோடு நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான கலந்துரையா டல்களையும் மேற்கொண்டு துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த வர்கள் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களாக இணைத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...