தேரர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்-காக தனி நீதிமன்றம்
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட ‘தர்ம நீதிமன்றம்’ஒன்றை மீண்டும் நிறுவுவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அரச வெசாக் விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால பௌத்த பாரம்பரியத்தின் இணையற்ற பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதையும், அந்த உன்னதமான ஆன்மிகச் செய்தியை மீண்டும் தேசத்திற்கு நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை பௌத்த மறுமலர்ச்சியின் வலிமைமிக்க மையங்களில் ஒன்றான மாத்தறை நகரை மையமாகக் கொண்டு இம்முறை தேசிய வெசாக் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் மத மறுமலர்ச்சியும் இன்றியமையாதது என்பதும், புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக நம் அனைவருக்கும் உள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு, அதற்காக கைகோர்ப்பதே இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் நாம் எடுக்கக்கூடிய மிகச்சிறந்த உறுதிமொழியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பௌத்த தர்மம் தற்போது வாழும் நமக்கோ அல்லது காவி உடை தரித்து வீற்றிருக்கும் மகா சங்கத்தினருக்கோ மாத்திரம் சொந்தமானதல்ல என்றும், புத்த தர்மம் ஒட்டுமொத்த உலக மக்களின் விமோசனத்திற்காகவும் நன்மைக்காகவும் போதனை செய்யப்பட்டுள்ளது. மகா நாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, மகா சங்கத்தினர் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பார்த்துள்ளது.
பூஜை, அனுஷ்டானங்களுக்கு முதலிடம் வழங்கி, அனைத்து மக்களின் இதயங்களையும் தர்மத்தின் குளிர்ச்சியால் சாந்தப்படுத்தி, 2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் விழாவை மிக விமரிசையாக ஏற்பாடு செய்யும் பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை சாசனாரக்ஷக சபை, மாத்தறை மாவட்ட சாசனாரக்ஷக சபை ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட மாத்தறை மாவட்டத்தின் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனாதிபதி தமது நன்றியை தெரிவித்தார்.