யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரட்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரட்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஹால் சதுரங்க என்ற 30 வயதுடையவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் குறித்து விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈராட்டபெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
