Main Menu

22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது – பிரதமர் இம்ரான் கான்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக 22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது என் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை விதிக்காமல், இம்ரான் கான் காலம் தாழ்த்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தான் பசிக்கும் கொரோனாவுக்கும் இடையே உள்ள சமநிலையைக் கண்டறிய வேண்டும். மேலும் 22 கோடி மக்களை அடைத்து வைக்க முடியாது” என்று தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 190 ற்கும் மேற்பட்ட நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...