Main Menu

22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு

ஊழல் புகாருக்கு ஆளானதை தொடர்ந்து, முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைவிடம் இருந்து தென்கொரியா பாராளுமன்றம் அதிபர் பதவியை பறித்தது.

முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைசியோல்:
தென் கொரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்க் கியுன் ஹை.
இவரது நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இந்த ஊழலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடி பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு எதிராக நாட்டில் போராட்டம் வெடித்தது. பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. மேலும், 3,094 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. வரும் 31-ம் தேதி இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என தென்கொரிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...