Main Menu

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அமித்ஷா நாளை தமிழகம் வருகை..!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகைதரவுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமித் ஷா, சுசீந்திரத்தில் தாணுமாலைய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து காலை 11.15 மணியில் இருந்து 12.15 மணி வரை வெற்றிக் கொடியேந்தி வெல்வோம் என பெயரில் தெருப்பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை ஹோட்டல் உடுப்பியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்ட பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...