Day: December 12, 2019
சஜித்தை தலைவராக்குங்கள் – ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பேற்க்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார , தலத்தா அத்துகோரள , சந்ராணி பண்டார ஆகியோர்மேலும் படிக்க...
பாதுகாப்பு செயலாளரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின்மேலும் படிக்க...
ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி
தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் ஊடக பிரதானிகளுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டிற்கும் நாட்டின் நற்பெயருக்கும் பயனளிக்கும் ஒரு ஊடக சேவையில்மேலும் படிக்க...
குடியரசுத் தலைவர் ஒப்புதல்: குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருகிறது
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த வரைபுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவரின் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் குறித்த சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்மேலும் படிக்க...
அயோத்தி தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குறித்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்குமேலும் படிக்க...
இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக் கூறலும் உறுதிப் படுத்தப்படும் – பொரிஸ் ஜோன்சன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், தமிழ் சமூகம் இந்த நாட்டிற்குச் செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அவர், மேலும்மேலும் படிக்க...
குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்
குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்பெய்ன் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 4 முதல் 7 வயது வரையிலான ஆயிரத்து 480 சிறுவர்களின் வாழ்க்கைமுறையின்மேலும் படிக்க...
தமிழ் சினிமாவின் பெரும் சகாப்தம் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்ரார் என அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 69 ஆவது பிறந்த தினம் இன்றாகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் 160இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிநாந்த் இந்தியாவில்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் இன்று!
பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில் நடைபெறும் மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களின் 650 தொகுதிகளுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், இங்கிலாந்து நேரப்படி இன்றுமேலும் படிக்க...
லண்டன் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்வு
லண்டனில் இந்த ஆண்டில் இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவும் இந்த தசாப்தத்தில் மிக அதிகமானதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. திங்களன்று ஹோர்ன்ஸியில் 47 வயதான ஜேம்ஸ் ஓ கீஃப்மேலும் படிக்க...
உலகில் ஊடகவியலாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடு – புதிய அறிக்கையில் தகவல்
உலகில் சீனாவிலேயே இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. சீனாவில் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்தக் குழுவின் அறிக்கைமேலும் படிக்க...
ஆய்வாளர்கள் எச்சரிக்கை! – பல மில்லியன் மக்களின் வாழ்விடங்கள் அழியும் அபாயம்
சர்வதேச அளவில் கடல் மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக கிரீன்லாந்தில் 1990-களில் இருந்ததை விட ஏழு மடங்கு வேகமாக பனி உருகிக் கொண்டிருப்பதாக அண்மைய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இதனிடையே 2100ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒருமேலும் படிக்க...
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை – புதிய சட்டமூலம் தாக்கல்
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்டமூலம் ஆந்திரா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுன்ட்டரில்மேலும் படிக்க...
உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர்-புவிராஜ்
உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக மட்டக்களப்பு வலய முன்பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.புவிராஜ் தெரிவித்தார். மேலும் ஐந்தாம் தரப்புலமைப்பரில் பரீட்சையானது ஒரு தோல்வியடைந்த திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பியூட்ச மைன்ட் கின்டஹார்டன்மேலும் படிக்க...
மானிப்பாயிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்
மானிப்பாய்- சுதுமலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாய்- சுதுமலை வடக்கில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஒரு மணியளவில்மேலும் படிக்க...
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை!
சுவிஸ் தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடக் கோரி சி.சி.டி. தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) கொழும்புமேலும் படிக்க...
தந்தையின் பிறந்த தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சௌந்தர்யா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,மேலும் படிக்க...
“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)

மானிட வாழ்வின் உரிமை பேணி மானிட உரிமையைக் காத்திடவே மனிதத்தைப் போற்றிடும் திங்களாக மார்கழித் திங்கள் பத்தினை மனித உரிமை தினமாக்கியதே ஐ.நா.வும் ! மனிதத்தின் மேன்மையே மனிதநேயம் மனிதநேயத்தை மிஞ்சியது உயிர்நேயம் அன்பு பண்பு பாசம் கொண்டு உயிர்களிடம் நேசம்மேலும் படிக்க...