Main Menu

பிரித்தானியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் இன்று!

பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது.  கடந்த ஐந்து வருடங்களில் நடைபெறும் மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

இந்தத் தேர்தலில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களின் 650 தொகுதிகளுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், இங்கிலாந்து நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

குறித்த தேர்தலானது கடந்த 100 வருடங்களில் பிரித்தானியா டிசெம்பர் மாதத்தில் எதிர்கொள்ளும் முதல் தேர்தலாகப் பதிவாகியுள்ளது.

மேலும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் யாவும் இரவு 10 மணியுடன் நிறைவுக்கு வரும் எனவும், வாக்களிப்புக்கள் யாவும் நிறைவுக்கு வந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தேர்தல் முடிவுகள் நாளைக்  காலை முதல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கமாக பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவதுடன், குறித்த தேர்தல்கள் ஒக்ரோபர் மாதத்தில் நடத்தப்படும்.

இந்நிலையில், கடந்த 1974ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறும் முதல் குளிர்காலத் தேர்தலாகப் பதிவாகியுள்ள அதே நிலையில், கடந்த 1923ஆம் ஆண்டுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...