Day: December 5, 2019
டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும்மேலும் படிக்க...
ராஜஸ்தான் – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் சிபா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகாமையில் இன்று நண்பகல் பொழுதில் 4 வயது நிரம்பிய பீமா என்ற சிறுவன்மேலும் படிக்க...
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன்ரஜினி, கமல் இருவருமே அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும்மேலும் படிக்க...
மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
மெரினா கடற்கரையை ஆறு மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி,மேலும் படிக்க...
அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படி முறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் – அலைனா டெப்லிட்ஸ்
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனாமேலும் படிக்க...
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்
தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர்இதனைத் தெரிவித்தார். மேலும் படிக்க...
முகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்துமேலும் படிக்க...
இலங்கையில் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன – சுவிஸ்
இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களை சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார சமஸ்டி திணைக்களம் நிராகரித்துள்ளது. டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ள வெளிவிவகார சமஸ்டி திணைக்களம் விசா விண்ணப்பங்கள் சட்ட ரீதியிலான காலக்கெடுவிற்குள் பரிசீலிக்கப்படுகின்றன,இது தொடர்பானமேலும் படிக்க...
அமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல் கட்டும் தளத்தின் தெற்கு நுழைவுவாயில் ஊடாக நேற்று (புதன்கிழமை) மாலை மர்ம நபர்மேலும் படிக்க...
குடும்பங்களுக்கு வருடத்துக்கு £6,700 க்கும் அதிகமான சேமிப்பை வழங்குவதற்கு தொழிற்கட்சி உறுதி
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டு மக்களின் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கு தொழிற்கட்சி உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு £6,700 க்கும் அதிகமாக சேமிப்பதற்கு தொழிற்கட்சியின் உண்மையான மாற்றத்திற்கான திட்டம் உதவுமெனமேலும் படிக்க...
பிரெக்ஸிற்றுக்கு பின்னர் வரிகளைக் குறைப்பதற்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுதி
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் முதல் 100 நாட்களுக்கான தமது திட்டங்களை வெளியிட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி, பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவதற்கும் பிரெக்ஸிற்றுக்கு பின்னரான வரவு செலவுத் திட்டத்தை வெளியிடுவதற்கும் உறுதியளித்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும், தேசிய காப்பீட்டுமேலும் படிக்க...
ட்ரம்ப் – மக்ரோன் இடையில் விவாதம்?
ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையில் காரசார விவாதம் நடந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றுவரும் நேட்டோ படைகளின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் ட்ரம்பும் மக்ரோனும் சந்தித்துப் பேசினர்.மேலும் படிக்க...
ஒன்ராறியோ மருத்துவ மனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக் கணக்கானோர் காயம்!
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ஒன்ராறியோ மாகாண தணிக்கையாளர் ஜெனரல் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000மேலும் படிக்க...
சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மூன்று இயக்குனர்கள் ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் A.L.விஜய் இயக்கும் திரைப்படத்திற்கு “தலைவி” எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்து வருகிறார். அத்துடன்மேலும் படிக்க...
ஜெனீவா: விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது!
ஜெனீவா விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளின் பொருட்களை திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பயணிகளிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குமேலும் படிக்க...
எட்டாம் இலக்க மெற்றோவின் ஒரு பகுதி சேவையில்
எட்டாம் இலக்க மெற்றோ முற்றாக தடைப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் சில தொடருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதி இன்று, எட்டாம் இலக்க மெற்றோவில் ஐந்தில் ஒரு சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6:30மேலும் படிக்க...
அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியாவிலிருந்து சென்ற படகு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் 83 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...