Main Menu

ட்ரம்ப் – மக்ரோன் இடையில் விவாதம்?

ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையில் காரசார விவாதம் நடந்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றுவரும் நேட்டோ படைகளின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் ட்ரம்பும் மக்ரோனும் சந்தித்துப் பேசினர்.

“சில நல்ல ஐ.எஸ். போராளிகளை தரட்டுமா? என்னால் அவர்களை உங்களுக்கு தர முடியும். நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை எடுத்து கொள்ளலாம்” என மக்ரொனிடம் ட்ரம்ப் கூறினார். இதற்கு “நாம் சீரியசாக பேசலாம்” என மக்ரோன் பதிலளித்ததுடன் ஐ.எஸ். இயக்கத்தை ஒழிப்பதுதான் தனது அரசுக்கு முக்கியமானது என கூறினார்.

அதனைத் தொடர்ந்து, “இதனால்தான் நீங்கள் சிறந்த அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். ஒரு கேள்விக்கு பதிலளிக்காமல் சமாளிப்பதால் சிறப்பானவர் நீங்கள். இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறேன்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிற நாடுகளில் இருந்து சென்று ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தவர்கள்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 800இற்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக் மற்றும் சிரியா சிறைகளில் உள்ளனர். அவர்களை அந்த நாடுகள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.  இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையில் மோதல் நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...