Main Menu

20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்

20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும்போது, சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றக் குழுவின் கண்காணிப்புடன் மாத்திரம் குறித்த செயற்பாடு மட்டுப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...