Main Menu

2/3 பெரும்பான்மையை நெருங்குகிறது பொதுஜன பெரமுன: தமிழரசுக் கட்சிக்கு 10 ஆசனங்கள்!

இதுவரை 75 வீதமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இதுவரை 125 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைப் பெற 150 ஆசனங்கள் தேவைப்படுகின்றது.

இந்த சூழலில், இன்னும் 39 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் இன்னும் 25 ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி 45 ஆசனங்களை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது.

அத்தோடு கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 106 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எந்த தொகுதிகளிலும் வெற்றிபெறாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன், ஏனைய கட்சிகள் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

பகிரவும்...