Main Menu

மாத்தளை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுனவுக்கு அபார வெற்றி!

மாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 188, 779 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 73,955 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி 7,542 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 6,592 வாக்குகளைப் பெற்றுள்ளது. எங்கள் மக்கள் சக்தி 3,984 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 407,569
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 312,576
செல்லுபடியான வாக்குகள் – 288,073
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 24,503

பகிரவும்...