இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய நல்லெண்ண அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யபபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள 360 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என பாகிஸ்தான் அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில், முதற்கட்டமாக குறித்த 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் லாகூரில் இருந்து அழைத்து செல்லப்பட்டு வாகா எல்லைப்பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக எதிர்வரும் 15ம், 22ம் மற்றும் 29ம் திகதிகளிலும் எச்சியுள்ள மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.