Main Menu

ஹொங்கொங் அரசாங்கத்திற்கு சிறப்பு உரிமை: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா!

ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

இந்த இராஜினாமா ஹொங்கொங்கில் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக செயற்படும் சட்டசபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு செல்லாமல் அவர்களது பதவியில் இருந்து நீக்க ஹொங்கொங் அரசாங்கத்திற்கு உரிமை வழங்கும் வகையிலான சட்டம் சீன நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

ஹொங்கொங் சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹொங்கொங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பர்.

பகிரவும்...