Main Menu

300 மில்லியன் அளவிலான கொவிட்-19 தடுப்பூசியை வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மில்லியன் டோஸ் (அளவு) வரை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் விநியோகங்கள் தொடங்கப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி எவ்வாறு வெளியிடப்படும் என்பது குறித்த விபரங்களை வழங்க மறுத்துவிட்டது.

கொவிட் -19 அறிகுறிகளை உருவாக்குவதிலிருந்து தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களைப் பாதுகாக்கிறது என்று ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமையன்று, ஃபைசர் மற்றும் பயோஎன்டெக், 43,500பேர் மீது சோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது.

நவம்பர் மாத இறுதிக்குள் இதைப் பயன்படுத்த அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...