Main Menu

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு!

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

ஹொங்கொங் தொடர்பான தேசிய பாதுகாப்பு சட்டமூலம் சீன நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சட்ட விவகாரங்களுக்கான நிலைக் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் என்று அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டமூலம் இந்த மாத இறுதியிலேயே அமுலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய சட்டத்தில், பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த மே 5ஆம் திகதி தொடங்கிய அந்த நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில், ஹொங்கொங் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த, அது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த சட்டமூலத்தை ஆய்வு செய்த நிலைக் குழு, சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு ஒப்புதல் அளித்தையடுத்து, அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது.

பகிரவும்...